2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 1ஆந் திகதி பாடசாலை வளாகத்தில் பல மகிழ்விப்பு போட்டிகளுடன் இடம்பெற்றது.
மாணவர்களுக்கு இலைக்கஞ்சியும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டதுடன் பரிசும் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.
எதிர்வரும் 2022.12.18 ஆம் திகதி நடைபெற இருக்கும் தரம் 5 புலமை பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆசீர்வாத பூஜை 2022.12.15 ஆம் திகதி அன்று " ஹாலிஎல வீரசக்தி விநாயகர் ஆலயத்தில்" நடைபெற்றது .
வாசிப்பு மாத நிகழ்வு 2022 நவம்பர் 9ம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.