1965ம் ஆண்டிற்கு முன்பு காலை மாலை என ப/டிக்வெல்ல பாடசாலையில், காலை சிங்கள மாணவர்களும், மாலை தமிழ் மாணவர்களும் கல்வி கற்றனர். 1965 கல்வி சீர்த்திருத்தம் காரணமாக டிக்வெல்ல வித்தியாலயம் சிங்களமயமாக்கப்பட்டது. 1965ம் ஆண்டிற்குப்பின் தமிழ் பாடசாலையின் தேவை கருதி பல தமிழ் பிரமுகர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுள் மூக்கையா JP, T.M.P.வாசுதேவன், கோ.செல்வராஜ், தங்கவேல் விஸ்வநாதன், ரொஸட் மகாதேவன், ரொக்கதன்ன சந்திர மோகன், மாயழகு பெரியசாமி, P. வேதாந்தமூர்த்தி ஆகியோர் நகரில் காணி கிடைக்காத போது ஹாலி-எல வீரசக்தி விநாயகர் ஆலய காணியை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். 1986ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டு; 1982-1988 வரை தளபாடம் இல்லாது திறப்பு விழா இடம்பெறவில்லை. ஒருவாறு தளபாடம் பெற்றுக்கொண்டு 1989.03.20 ம் திகதி ப/ஹாலி-எல தமிழ் வித்தியாலயம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதிபராக பொறுப்பேற்ற கௌரவ அதிபர் சுப்பையா அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையை நடாத்திச் சென்றார். மாணவர் தொகை அதிகரிக்க அதிகரிக்க கட்டிட வசதி போதாமையினால் கொட்டில்கள் அமைத்து கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் தற்போது இருக்கின்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் காணி ரொக்கத்தனை தோட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, ஆரம்பப்பிரிவு ரொக்கத்தனை தமிழ் வித்தியாலமாகவும் சிரேஷ்ட பிரிவு ஹாலி எல தமிழ் வித்தியாலயம் எனக் கருதி அரை ஏக்கர் ரொக்கதனை தமிழ் வித்தியாலயத்திற்கும் ஒன்றரை ஏக்கர் ப/ஹாலி-எல தமிழ் வித்தியாலயத்திற்கும் கிடைத்தது. 1989-2002 ம் ஆண்டு வரை சுப்பையா அதிபரின் தலைமையில் பாடசாலை முன்னேற்றப்பட்டது. 2003-2015ம் ஆண்டு வரை கௌரவ லோகேஸ்வரநாதன் அவர்கள் அதிபராக பணியாற்றினார்கள். அன்றைய காலங்களிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றது. 2016 ஆம் ஆண்டு முதல் அதிபர் திரு.க.சந்திரபோஸ் அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தில் புதிய மாற்றத்துடன் தேசிய பாடசாலையாக முன்னேறி வருகின்றது.

1989



