வாழ்க என்றும் வளமுடன் - எங்கள்
ஹாலி – எல தேசிய கல்லூரி (வாழ்க)
ஆற்றல்கள் அனைத்தையும் அறிவினில் வென்றே
ஆக்கங்கள் பலதையும் சிரத்தினில் கொண்டே
புதிய உலகை உருவாக்கிடவே
புத்தாக்க சிந்தனை புவனமும் பெற்றிட ! (வாழ்க)
நவீன உலகின் நடப்புகள் கற்றே
நானிலம் போற்றும் தொழினுட்பம் வென்றெ
சாதிக்க பற்பல திறன்களைப் பெற்றே
சவால்கள் வென்றிடும் சந்ததி தொடர! (வாழ்க)
இயற்கையும் பசுமையும் இனிப்புற காத்தே
இதன்வழி கைத்தொழில் நவீனம் கற்றே
மனதினில் மாற்றத்தை மாண்புறப் பெற்றே
மதிகொண்டு கல்வியால் உலகையே வெல்ல ! (வாழ்க)
அன்பும் அறனும் அகத்தினில் நிறைத்தே
ஆசான் சொல்வழி செயலது நடந்தே
ஈழத்தின் முதன்மை கூடமாய் இதனை
இணைந்து நாங்கள் உயர்த்திக் காட்டிட (வாழ்க)



